பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த 16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்..
இதனையடுத்து இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் உடலை மீட்டு எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. மேலும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கட்டட உரிமையாளர் மணி, ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஆகியோரை போலீஸ் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் அமீர்கானை மூன்று மாதத்திற்கு முன்பு தான் பணியில் அமர்த்தி உள்ளார் கோடீஸ்வரன்.
மேலும் அவர் பணியில் ஈடுபடும் போது, யாருமே அங்கு கண்காணிப்பதற்கு இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், ஆபத்தான பணியை மேற்கொண்டதால் விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.. காங்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் சிறுவன் அமீர்கான் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.