ஐ.எஸ். அமைப்பினரின் தொடர் தாக்குதல் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்திலிருந்து வெளிநாட்டுப் படைகள் கடந்த மாத இறுதியில் வெளியேறியுள்ளது. அந்த வெளியேற்றத்திற்குப் பின் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வந்துள்ளனர். இந்த தாக்குதலை அவர்கள் தலீபான்களை மையமிட்டு நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து தலீபானின் வண்டியை மையமாகக் கொண்டு மாகாணத் தலைநகரில் வைத்து வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலீபான் போராளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதோடு ஒரு நகராட்சி அதிகாரியும், பொதுமக்கள் மூவர்,தலீபான்கள் போராளிகள் மூவர் என மொத்தமாக 7 பேர் படுகாயம் அடைந்துள்ளது அப்பகுதியில் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆப்கானிய மக்கள் கூறும்போது, தீவிரவாதிகள் நடத்திவரும் இந்த தொடர் தாக்குதலை நிறுத்த, ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்கள் மாகாணத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தி மறைந்து வாழும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.