வெள்ளயங்கிரி மலையில் கார்த்திகை தீபம் என்ற அனுமதி கோரிய வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்த்தை ஒட்டிய நாட்களில் வெள்ளையங்கிரி ஏழாவது மலையில் மகாதீபம் ஏற்றும் நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக அதிகளவில் பக்தர்கள் இந்த மலைக்கு வந்து இந்த தீபத்தில் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தீபம் ஏற்ற அனுமதி மறுத்து விட்டது.இதைத்தொடர்ந்து வெள்ளயங்கிரி மலை கோவில் பூசாரி , பக்தர்கள் என பலரும் கார்த்திகை தீபம் ஏற்ற டிசம்பர் 10 முதல் 12-ஆம் தேதி வரை அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு அனைத்தையும் பொதுநல வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய விசாரணை நீதிபதி சேசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு தான் , மனிதர்களுக்கு கிடையாது என்ற கருத்தை நீதிபதிகள் கூறி தமிழக அரசு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.