வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் கண்மாயில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி பெரியகுளம் அடுத்துள்ள நஞ்சாபுரம் கண்மாயில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களுக்கும் செயல்விளக்கம் செய்து கண்பிக்கபட்டுள்ளது.
மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேஷன் தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி, தென்கரை வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.