Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… 33 பேர் சிறையில் அடைப்பு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 33 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பழிக்குபழி சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 33 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |