சீனாவின் மத்திய வங்கியானது, கிரிப்டோகரென்ஸி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.
உலக அளவிலான வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பல சர்வதேச வணிக நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் கரன்சிகளை அனுமதிக்கிறது. இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோகரென்ஸிகள் முழுவதும் அரசு வெளியிடும் பணம் கிடையாது.
எனவே, இதை சந்தையில் பயன்படுத்த முடியாது என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சீனா, கிரிப்டோகரென்ஸி குறித்த பரிவர்த்தனைகள் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி தடை அறிவித்திருக்கிறது. இதனால், பிட்காயினுடைய மதிப்பானது, 5.5% வரை நேற்று சரிவடைந்திருக்கிறது.