உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர் கோட்டையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை முகமது சல்மான் என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது சல்மானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.