ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி அணி 154 ரன்கள் குவித்துள்ளது .
14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற அணி தேர்வு செய்துள்ளது.அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். இதில் தவான் 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து பிரித்வி ஷா 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .
இதன்பிறகு கேப்டன் ரிஷப் பண்ட் – ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் கேப்டன் ரிஷப் பண்ட் 23 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஹெட்மையர் 28 ரன்னும் ,அக்சர் பட்டேல் 12 ரன்னும் எடுத்து வெளியேறினர் .இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்துள்ளது .இதில் ராஜஸ்தான் தரப்பில் சேத்தன் சகாரியா, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர் .