Categories
தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதனை வீடியோ எடுத்த கொடூர தாயார்…. பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!

மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி விழாவில் பங்கேற்க வருமாறு போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற பெண் போலீஸ் ஏட்டுவை பிறந்தநாள் விழா முடிந்தவுடன் ஆண் நண்பர் மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். இதற்கு அந்த ஆண் நண்பரின் தாயாரும் இதற்க்கு உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது. மேலும் அந்த வீடியோவை வைத்து போலீஸ் ஏட்டை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியிலும் அந்த ஆண் நண்பரின் தாயார் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த போலீஸ் ஏட்டு கடந்த 13ம் தேதி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த ஆணின் தாயார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக போலீஸ் ஏட்டுவின் ஆண் நண்பர் மற்றும் அவரது தாயார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |