Categories
கிரிக்கெட் விளையாட்டு

சோகத்தில் இருந்த விராட் கோலி செய்த செயல் …. இணையத்தில் வைரலான போட்டோ ….!!!

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கு பின் விராட் கோலி ,தோனியை கட்டிப்பிடித்து கொண்ட புகைப்படம்  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் போடுவதற்கு முன்பாக மைதானத்தில் மணல் புயல்  வீசியதால் ஆட்டம் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதமானது .இதன்பிறகு டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 53 ரன்னும் , தேவ்தத் படிக்கல் 70 ரன்னும் எடுத்தனர். இதன்பிறகு 157 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி விளையாடியது.

இறுதியாக 18.1ஓவரில் சென்னை அணி 157 ரன்கள் எடுத்த எளிதில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் அணி இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் 2-வது தோல்வியை சந்தித்துள்ளது இதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர்  அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி அணியின் மற்ற வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த விராட் கோலி தோனியை பின்னாலிருந்து அன்போடு கட்டி பிடித்து அனைத்து கொண்டார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

Categories

Tech |