Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியில் ராஜாரத்தினம் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி வழக்கமாக எடுத்துகொள்ளும் மாத்திரை வாங்குவதற்காக ராமநாதபுரம் பாரதிநகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாத்திரைகளை வாங்கிய ஜோதி பட்டணம்காத்தானில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மர்மநபர் யாரோ ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனைதொடர்ந்து பட்டனம்காத்தான் பேருந்து நிலையத்தில் இறங்கிய ஜோதி சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |