Categories
உலக செய்திகள்

4 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்.. பொதுவெளியில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது இடத்தில் சடலங்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் என்ற நகரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களின் உடல்களை வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்க விட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் நான்கு நபர்களையும் அவர்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1441697856155537409

மேலும், இனிமேல் கடத்தல் சம்பவங்களை நடத்துபவர்களின் நிலை இதுதான் என்ற போஸ்டர்கள் அவர்களது உடலின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களை பொதுவெளியில், தொங்கவிட கிரேனை உபயோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |