தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி, பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், சொன்னதை செய்வது மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் திமுக அரசு. நாங்கள் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இந்த நான்கு மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்திய துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்கக்கூடாது. எப்போதும் இப்படி தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம் என்று பேசியுள்ளார்.