லண்டனில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
லண்டனில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள், இது மாதிரியான சம்பவங்களை எதிர்த்து அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விசாரணை அதிகாரியான Trevor Lawry என்பவர், அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்களிடம், குற்றவாளியை பிடிக்க தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது இந்த ஆசிரியை கடந்த 17ஆம் தேதி அன்று, தன் வீட்டிலிருந்து நண்பரை சந்திப்பதற்காக ஒரு விடுதிக்கு சென்றிருக்கிறார். அதற்கு மறுநாள் ஒரு பூங்காவில் அவர் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இந்நிலையில், குற்றவாளியை கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் லண்டன் மேயரான சாதிக் கான் கூறுகையில், இந்த கொரோனா காலத்தில், ஒரு வருடத்தில் மட்டும் நாடு முழுவதும் ஆண்களால், சுமார் 180 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.