காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக இருந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பழிக்குபழி போன்ற குற்றங்களை தடுக்க காவல்துரையினரருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியல் தாயரிக்கபட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் 80 பேர் வீட்டில் அரிவாள், கத்தி, நீண்ட வாள், வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் 2-வது நாளாக அந்த 80 பேரிடம் நடத்திய விசாரணையில் 8 பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என சந்தேகமடைந்த காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மீதம் இருந்த 72 பேரிடம் இருந்து குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி எழுத்துகொண்டு பத்திரத்தில் எழுதிவாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதால் மாவட்டத்தில் பல்வேறு ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் தப்பி சென்றுள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.