மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத்நகரில் தராசு வியாபாரி வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வியாபாரி தன் மகள் என்று பாராது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவி அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வியாபாரியிடம் விசாரணை மேற்கொண்டபோது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் வியாபாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.