தர்மபுரியில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரியானது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக கிராம மக்கள் ஆடை பலியிட்டு வழிபாடு செய்தனர்.
தமிழகம் முழுவதும் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரியானது முழுக்கொள்ளவை எட்டியதோடு உபரிநீரும் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஏரி நிரம்பி வெளியேறும் நீரை வரவேற்கும் விதமாக மலர் தூவியும், ஆடு பலியிட்டும் வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையின் காரணமாக இந்த ஏரியானது முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஒருமுறை கூட ஏரி முழுதாக நிரம்பவில்லை என்றும், ஐயன் காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினோம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் ஏரின் நீரை வரவேற்கும் விதமாக மலர்களை தூவியும், ஆடு பலியிட்டும் வழிபாடு செய்து வருகிறோம் என்றனர்.