Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் தான் தீர்வு காணனும்…. தேங்கி நிற்கும் மழை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை மின்மோட்டார் மூலமாக அகற்றினாலும் ஏரி, கால்வாய் வழியாக செல்லாமல் தேங்கி நின்றுள்ளது. இதன் காரணத்தினால் மீண்டும் மழைநீர் சுரங்கப் பாதைக்கு வந்து விடுகிறது. அதனால் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஏலகிரி கிராமம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் காட்டேரி ஊராட்சி நிர்வாகம் இணைந்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இங்கு தேங்கி நிற்கின்ற மழை நீருக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பல வருடங்களாக மழை காலங்களில் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை நிரந்தரமாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |