இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் 2-வது சீசனின் புள்ளிபட்டியல் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.முதல் சீசனில் அட்டவணையில் மாஸாக இருந்த அணியினர் தற்போது சறுக்கி வருகிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் நடப்பு சாம்பியனான மும்பையும் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியைக் கண்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து கெத்தாக ஆடிவரும் டெல்லி டெல்லி கேப்பிடல், தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
முதல் சீசனில்4ஆவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது சீசனில் அடுத்தடுத்து தோல்வி கண்டு ஆறாவது இடத்திற்கு சென்று தடுமாறிக் கொண்டு இருந்தது இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லுமா ? என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடைசியாக மும்பை ஆடிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று 4ஆவது இடத்தை கைப்பற்றிய நிலையில் மும்பை அணி 4ஆவது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு சென்றது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில்
புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 6-ஆம் இடத்துக்கும், 6ஆவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 5-ஆம் இடத்துக்கு வந்துள்ளது. இதனை மும்பை ரசிகர்கள் ஆகா ஓகோ என மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள். மும்பை அணி 9 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.