ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என தகவல் பரவி வருகிறது. மேலும் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.