Categories
உலக செய்திகள்

76வது பொதுகூட்டம்…. பங்கேற்ற இந்தியா தலைவர்கள்…. உரையாற்றிய பிரதமர் மோடி….!!

ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் மோடி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு உள்ளார். அப்பொழுது அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விடுதியின் வெளியே திரண்டனர். மேலும் அவர்கள் பிரதமரை கண்டதும் தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து பிரதமரும் அவர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதற்கு பிறகு பிரதமர் மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

குறிப்பாக அந்த பொதுக்கூட்டத்தில் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷிரிங்லா மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியா தூதரான டி.எஸ். சந்து போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பொழுது இந்தியப் பிரதமர் மோடி கூறியதில் “உலகம் முழுவதும் நூற்றாண்டுகளில் இல்லாத பெரும் தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பின் தொடர்கிறது.

இந்த கொடிய தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியையும் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ” கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மையே நாட்டின் உறுதியான ஜனநாயகத்தின் அடையாளம் ஆகும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி என்பது  அனைவரையும் உள்ளடக்கியாதகவும் உலகத்திற்கே உரிய ஒன்றாகவும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |