Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடைபெற்ற…. குவாட் உச்சி மாநாடு…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற நான்கு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை  நன்கொடையாக உலகிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்து வரவுள்ள தொற்றை சமாளிக்கவும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |