ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 125 ரன்கள் குவித்துள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 5 ரன்னில் வெளியேறினார் .
இதன்பிறகு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 18 ரன்னும் ,நிக்கோலஸ் பூரன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார் .இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது .இதில் ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இதன்பிறகு களமிறங்கி உள்ள ஹைதராபாத் அணி 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.