பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் சுயநலமாக செயல்பட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பெட்ரோல் மற்றும் உணவு பொருள்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் நிலையங்கள் சிலவற்றில் ஒரு நபருக்கு 30 பவுண்டுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுகின்றன.
இதனால் தாமாக நிரப்பிக் கொள்ள கூடிய பெட்ரோல் நிலையங்களில் பலர் குவிந்து வருகின்றனர். மேலும் இங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதிக அளவிலான பெட்ரோலை தாமாகவே கேன்களில் நிரப்பும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கனரக வாகன ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் ட்ரக் கொண்டு வர ஆட்கள் இல்லை. இதனால் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மேலும் பல்பொருள் அங்காடிகளில் சரக்குகள் இன்றி தவிக்கின்றது. அதோடு அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பட்டால் ஹோட்டல் மற்றும் மதுபான கூடங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.