தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி தோப்பு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த டீக்கடையில் வைத்திருந்த 5 கிலோ உடைய கலப்படம் உள்ள டீத்தூள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அளிக்கப்பட்டுள்ளது.