தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளருக்கு 5000 அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி பல கடைகளில் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட ஒரு கிலோ குட்கா இருந்ததை அலுவலர் கண்டுபிடித்துள்ளார். இதனை பறிமுதல் செய்து அந்தக் கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.