Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடிரென தீவிர வேட்டை…. சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்…. டி.ஜி.பி உத்தரவு….!!

2 நாட்கள் நடத்திய சோதனையில் 20 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கணேசன் மற்றும் காவல்துறையினரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து இரண்டு நாட்களாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் 97 குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து ஆறு ரவுடிகளுக்கு நன்னடத்தை உறுதிமொழி பிணைபத்திரம் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 142 நபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 4500 ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களில் 855 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தியதில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 20 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |