Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கிக்கோங்க …”கையும் , களவுமாக சிக்கிய ஆய்வாளர்” லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி …!!

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர்.

Image result for லஞ்சம்

பின்னர் காவல் ஆய்வாளருக்கு 20 ஆயிரம் லஞ்சம் கொடுப்பது கொடுத்து , அவர் வாங்கிய போது கையும் , களவுமாக பிடிபட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம் காவல் நிலையம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் அறையில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் ஆய்வாளரை கைது செய்திருக்கிறார்கள். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டு காவல் ஆய்வாளரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |