Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தந்தை…. மகன்களின் கொடூர செயல்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை 2 மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கரைமேடு கிராமத்தில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ரகுவரன் மற்றும் ராஜராஜன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜவேல் மனைவி அம்பிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் இரண்டு மகன்களும் ராஜவேலுவை தட்டி கேட்ட போது மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கோபம் அடைந்த ராஜராஜன் மற்றும் ரகுவரன் ஆகிய 2 பேரும் அருகிலிருந்த உருட்டுக்கட்டையால் ராஜவேலுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜவேல் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜவேலுவின் தங்கையான ராஜகுமாரி அவரின் 2 மகன்கள் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |