உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் இணைந்து நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். ஹாலிவுட் ஹிந்தி என பல படங்களில் நடித்த இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் குடி உரிமையுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர் “இந்தியர்களின் பார்வை பெண்கள் விஷயத்தில் மாறியுள்ளது. வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
முன்பு நான் நடித்தபோது கவர்ச்சி அதிகம் என்று விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். நான் பார்த்த பொதுமக்கள், எனக்கு கிடைத்த தீர்ப்பு என அனைத்துமே கொடுமையானதாக இருந்தது. சிலர் எனக்கு கொடூரமானவர்களாக தெரிந்தார்கள் அதற்கான காரணம் எனக்கு தெரியாது. என்னைப் பற்றி பல அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பியது மட்டுமில்லாமல் சிலருடன் என்னை சேர்த்து வைத்து பேசினார். இவை எதையும் சமாளிக்க தெரியாமல் தான் அமெரிக்க குடியுரிமை பெற்று இந்தியாவை விட்டு வெளியேறினேன்” என கூறியுள்ளார்.