தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல நடிகரான தல அஜித்குமார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் துப்பாக்கி சுடுதல், பைக் ரைட் போன்ற விளையாட்டுகளில் தனது ஆர்வத்தை காட்டும் அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். சமீபத்தில் டெல்லி சென்ற அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வரும் Dr.Maral Yazarloo என்ற பெண்ணை சந்தித்து அவரது உலக சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப்பெண் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் வைரலானதை பார்த்து ஆச்சரியம் அடைந்த அந்த பெண் கூகுள் மூலமாகத்தான் அஜித் பற்றி தெரிந்து கொண்டதாகவும் தற்போது அவருடன் எடுத்த போட்டோ வைரலானதை வைத்து அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித் அவர்கள் சமூகவலைதளத்தில் இல்லை என்பதால் அவரது அனுமதியைப் பெற்ற பிறகுதான் புகைப்படத்தை வெளியிட்டதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CUMPz_NpRKX/?utm_source=ig_web_copy_link