புதிதாக எல்பிஜி இணைப்பு பெறுவதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் கொடுக்க வேண்டாம். இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் கூட சிலிண்டரை பெறலாம். இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது உஜ்வாலா யோஜனா 2.0 என்ற புதிய திட்டம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் எல்பிஜி இணைப்பிற்கு ரேஷன் கார்டு அல்லது பிற முகவரி சான்று வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக முகவரி ஆதாரம் இல்லாமல் எல்பிஜி சிலிண்டர் வாங்க முடியாது. தற்போது புதிய எல்பிஜி இணைப்பிற்கு முகவரி தேவையில்லை. அதன்படி வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை இன்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தங்கள் பகுதிக்கு அருகில் சென்று வாங்கலாம். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.
சிலிண்டருக்கான பணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த சிலிண்டரை நீங்கள் திருப்பி தர விரும்பினால், ஐந்து ஆண்டுகளில் திருப்பித் தந்தால் சிலிண்டரின் விலை 50 சதவீதம் அப்படியே திருப்பி தரப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திருப்பித் தந்தால் 100 ரூபாய் திருப்பி தரப்படும். இதனை தவிர வீட்டில் இருந்து எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்ய 8454955555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இது ஒவ்வொரு எரிவாயு சீட்டைப் நிறுவனத்திற்கும் ஏற்ப வேறுபடும்.
ஆன்லைன் மூலமாக முகவரி சான்று இல்லாமல் சிலிண்டர் பெற எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் நீங்கள் pmuy.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் புதிய உஜ்வாலா யோஜனா 2.0 இணைப்பிற்கு விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் எச்பி, இன்டேன் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு தேவையான ஒன்றே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
பின்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு எல்பிஜி இணைப்பு உங்கள் பெயரில் வழங்கப்படும்.
நீங்கள் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.