தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விண்ணப்பம் பரிசீலனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுக்கு உணவுத் துறை தெரிவித்துள்ளது.