நியூயார்க் நகரில் நடைபெற்ற 76ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலிருக்கும் ஐ.நா பொது சபையில் நடைபெற்ற 76 ஆவது கூட்டத் தொடரில் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அப்போது உரையாடிய நரேந்திர மோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார்.
அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பொதுமக்களுக்கு மிகுந்த துயரை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பலருக்கும் தனது அஞ்சலியையும் செலுத்திக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.