Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : வெற்றி கணக்கை தொடருமா சிஎஸ்கே ….? கொல்கத்தாவுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 -ல் வெற்றி,                   2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி , 5 தோல்வி என புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை அணி மும்பை மற்றும் பெங்களூர் அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல கொல்கத்தா அணியும் மும்பை ,பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. இதனால் இரு அணிகளும் சரிசம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது.

Categories

Tech |