குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இறவார்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் பிரதான சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் வெளியேறாமலும், கழிவு நீர் தேங்கியும் கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் தார் சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியினை அதிகாரிகள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.