சிக்க மங்களூரு அருகே குரங்கு ஒன்று பழி வாங்க வேண்டும் என்பதற்காக 22 கிலோமீட்டர் பயணித்து வந்து, 8 நாட்களாக ஆட்டோ டிரைவரை துரத்தி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சில பொதுமக்களின் உதவியுடன் குரங்கை பிடிக்க முடிவு செய்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஜெகதீஷ் உதவியை நாடினார். எதுக்கு ஜெகதீஷ் குரங்கை விரட்டி சென்று ஒரு திசையை நோக்கி ஓட வைத்து குரங்கை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் குரங்கு ஆட்டோ டிரைவரை தாக்கியது.
இதையடுத்து குரங்கை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அங்கிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று குரங்கை விட்டு வந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் குரங்கு மீண்டும் ஜெகதீசனை தேடிவந்தது. ஜெகதீஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அவரின் ஆட்டோ மீது தாவி ஆட்டோவின் கவரை கிழித்த நாசம் செய்தது. அவரையும் தாக்க முற்பட்டது. இதனால் பயந்து போன ஜெகதீஷ் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள் தங்கிவிட்டார். இந்த சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அந்த குரங்கு அவரின் வீட்டை சுற்றி சுற்றி வருகின்றது. இதனால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. ஜெகதீஸ் விரட்டிய குரங்கும் இதுவும் ஒன்று தான் என்பதற்கு அதன் காதில் இருந்த அடையாளத்தை அனைவரும் பார்த்து அடையாளம் கண்டுள்ளனர். குரங்கை பிடிக்க மீண்டும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.