15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ஏழு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.