கோவையில் பட்டங்களைப் பறக்க விட்டு தங்க வியாபாரி ஒருவர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தங்க நகை பட்டறைகள் பணிபுரியும் கோவையை சேர்ந்த ராஜா என்பவர் வஉசி மைதானத்தில் விதவிதமான வடிவங்கள் கொண்ட டெங்கு விழிப்புணர்வு பட்டங்களை வானில் பறக்கவிட்டு மக்களின்கவனத்தை ஈர்த்தார். அதன்படி பட்டங்களில் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அதன் படங்கள் இடம்பெற்றிருந்தன.இவரின் இந்த புதிய முயற்சிக்கு கோவை மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.