உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் மகளிர் ‘காம்பவுண்ட்’ மகளிர் பிரிவுக்கான இறுதிச் சுற்று போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார் மற்றும் பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது .
இதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா ஜோடி 150-154 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் முனோஸ்-சாரா ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.