ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற 76வது ஐநா பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்கள். இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை.
ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த தலிபான்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற 76 ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் உலக நாடுகளிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைந்துள்ள ஆட்சியை உலக நாடுகள் அனைத்தும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுகொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.