Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. டிரைவருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மலைப்பகுதியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரிலிருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தூத்துக்குடிக்கு சென்றது. இந்த லாரியை தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாயில்  வந்து கொண்டிருக்கும்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கண்டெய்னர் ரோட்டில் விழுந்ததோடு லாரி எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியில் மோதியது. இதனால் டிரைவர் ராமர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த விபத்தினால் தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் லாரி மற்றும் கண்டெய்னரை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |