Categories
மாநில செய்திகள்

விசாரணையில் வெங்கடாசலம்…. வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார்.. 2019ஆம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வருகிறார். இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், கடந்த 23ஆம் தேதி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீடு என 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டிலிருந்து 13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மர பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.

மேலும் சந்தன பொருட்கள் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.. வனத்துறையினர் அடுத்தகட்ட விசாரணை நடத்த உள்ளனர்.. அடுத்தகட்டமாக வெங்கடாசலத்தின் வங்கி லாக்கறை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்..

 

Categories

Tech |