இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை முதன் முறையாக சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இவ்விருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, ” இந்தியாவும், அமெரிக்காவும் ஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை தடுப்பதே மிகவும் அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டு செயற்குழுவை அமைக்கப்பட உள்ளது. இரு நாடுகளும் எல்லை கடந்து செயல்படும் பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் எந்த நாடும், பிற நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவு அளித்தலுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிரீதியகவும், பொருள் ரீதியாகவும் ஆதரவு நல்கிட கூடாது.
ஆப்கானிஸ்தான் பிராந்தியமானது, பிற நாடுகளை பயமுறுத்துவதற்காக மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு நல்குவதற்காகவே பயன்படக் கூடாது. அங்கு பொறுப்பேற்றிருக்கும் புதிய ஆட்சியாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2593- ஆவது தீர்மானத்தை மதித்து செயல்படவேண்டும். தலீபான் மக்களும், வெளிநாட்டினரும் ஆப்கானில் இருந்து வெளியேற அமைதியான முறையில் பாதுகாப்பு நல்கிட வேண்டும். மேலும் பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களின் மனித உரிமைகளும் ஆப்கானில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தலீபானானது ஆப்கானில் மனித உரிமை சார்ந்த உதவிகளை அளித்திட, ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதியும், பாதுகாப்பும் தரவேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் பிற நாடுகளுடன் இணைந்து ஆப்கானில் அமைதியான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர உறுதி எடுத்துள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.