Categories
அரசியல்

கொடுத்த வாக்குறுதியை…. இம்மி கூட பிசகாமல் செய்யுறோம்…. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்…!!!

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தினால் தான் இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்து இருக்கிறேன். நீங்கள்  அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்கார்வதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்வார்கள் என நம்பி நீங்கள் வாக்களித்தீர்கள்.

நீங்கள், எங்கள் மேல் வைத்து இருக்கும்  நம்பிக்கையை நாங்கள் இம்மிபிசகாமல் காப்பாத்தி கொண்டு  இருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். ஆட்சிக்கு வந்து நான்கு மாதம் தான் கடந்திருக்கிறது. இந்த நான்கு மாதத்திற்குள் சொன்னதில்  பெரும்பான்மையை செய்துவிட்டோம். 505 வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் பெரும்பாலானவைகளை நிறைவேற்றி விட்டோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

Categories

Tech |