காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போடியை அடுத்துள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் போடி புறநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 30 மூட்டைகளில் சும்மார் 1,500 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்தும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.