தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது . அந்தமானை ஒட்டியுள்ள வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்த புயல் குலாப் புயல் என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல்கள் ஏற்படுவது மிகவும் அரிதானது. இந்த குலாப் புயல் விசாகப்பட்டினம்- கோபாலபூருக்கு இடையே இன்று மாலை கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அதனால் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யு வாய்ப்புள்ளது . அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், பாம்பன் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.