Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: தினம் ஒரு சாதனை செய்யுறோம்…. பாராட்டியே ஆக வேண்டும்…. பெண்களை புகழ்ந்த மோடி …!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மங்கி பார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வரண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு புத்தூயிர் அளித்துள்ளார்கள்.

நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும். நதிகளை போற்றி புகழ்கிறார்கள், அன்னையர்கள் என்கிறீர்கள், ஆனால் அது ஏன் மாசுபட்டு போகின்றன.

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது முறை வரும்போது நாம் கண்டிப்பாக தடுப்பூசி  செலுத்த வேண்டும்

யாருக்காவது தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களையும் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலத்தில் கொரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Categories

Tech |