இளம்பெண் தனது 15 வயதிலேயே குழந்தை பெற்றெடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் என்பவர் 15 வயதிலேயே தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே கடந்த 2017ல் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து தற்பொழுது அவர் கூறியதில் “நான் 2017 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள் சென்று விட்டு வீடு திரும்பினேன். மேலும் வீட்டிற்கு வந்த பின்னர் தூங்குவதற்காக படுக்கைக்கு சென்ற போது எனது முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து நான் தூங்கி மறுநாள் காலையில் எழுந்தேன். அப்பொழுது என் பெற்றோரின் கண் முன்பாகவே திடீரென ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்” என்றார்.
மேலும் கூறியதில் “நான் கர்ப்பமாக இருந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. மேலும் மாதவிடாயும் எனக்கு சரியாக தான் வந்து கொண்டிருந்தது. ஆனால் நெஞ்செரிச்சல் மட்டும் இருந்தது. இருப்பினும் என் வயிறும் பெரிதாக தெரியவில்லை. அதிலும் என் தாயார் கர்ப்பமாக இருக்கும் போது அவருக்கும் நெஞ்செரிச்சல் உள்ளதாக என்னிடம் கூறியிருந்தார். இதனால் நான் சந்தேகப்பட்டு கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டேன். ஆனால் அந்த பரிசோதனையிலும் நான் கர்ப்பமாக இல்லை என்றே வந்தது. இந்த நிலையில் அன்று நான் காலையில் எழுந்து கழிவறைக்கு சென்றபோது திடீரென ஒரு ஆண் குழந்தையைப் பெற்றேன்.
இதனை எனது தாயாரிடம் அதிர்ச்சியாக கூறினேன். குறிப்பாக நான் ரகசியமாக எனது கர்ப்பத்தை அனுபவித்துள்ளேன். இதனை அனைவரும் செய்யும் வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலம் என்னால் கண்டறிய முடியவில்லை” என்று கூறியுள்ளார். குறிப்பாக பெரும்பாலான பெண்கள் இருபது வாரத்திற்கு பிறகு தாங்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதேசமயம் சில பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வரை தாங்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியாமல் கூட இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.