வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி தீயணைப்பு துறையினரின் சார்பில் உப்புகோட்டையில் உள்ள முல்லை பெரியாற்றில் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. அப்போது நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை எதிர்ப்பாராத விதமாக வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள், உறவினர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலிகுடம், கியாஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து, லாரி டியூப், வாழைமரம், லைப் ஜாக்கெட் போன்றவை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தெருக்கல் தண்ணீர் தேங்காமல் இருக்க பொக்லைன் இயந்திரங்கள் தாயார் நிலையில் வைக்கப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போடி தாசில்தார் செந்தில் முருகன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் முத்து நவரத்தினம், ஊராட்சி தலைவர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.